Categories
உலக செய்திகள்

OMG…. “வெடித்து சிதறிய எரிமலை”….! அச்சத்தில் பொது மக்கள்…. துரித நடவடிக்கையில் அதிகாரிகள்….!!!

ஜாவா மாநிலத்தில் உள்ள எரிமலை வெடித்து சிதறி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இந்தோனேசியா நாட்டில் கிழக்கே உள்ள ஜாவா மாநிலத்தில் உள்ள மௌன்ட் மெராபி எரிமலை வியாழன் இரவு வெடித்து சிதறியது. இதனை தொடர்ந்து தேசிய பேரிடர் தடுப்பு நிறுவனத்தின் பத்திரிக்கையாளர் அப்துல் முராரி வெளியிட்ட அறிக்கையில் சுமார் ஐந்து கிலோ மீட்டர் வரை இந்த எரிமலையில் இருந்து வெப்பம் வெளியேறியதாக தெரிவித்துள்ளார்.மேலும் இந்த எரிமலையின் வெடிப்பு சத்தம் பல கிலோமீட்டர் தூரத்தில் கேட்டதாக அங்குள்ள மக்கள் கூறியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள மக்கள் 253 பேர் தற்காலிகமாக யோக்யகர்த்தா சிறப்பு மாநிலத்தில் உள்ள கிளாகஹார்ஜோ மற்றும் உம்புல்ஹார்ஜோ கிராமங்களிளும் மற்றும் மத்திய ஜாவாவின் கிளாட்டன் மாவட்டத்திலும்  தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த சம்பவத்தினால் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |