Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“தனுஷுக்கு எதிராக செக் வைத்த லதா ரஜினிகாந்த்”… “லதாவை எதிர்க்கத் துணிந்த தனுஷ்”…!!!

தனுஷ் மற்றும் வெற்றிமாறன் படத்தின் கூட்டணி குறித்த தகவல் கூடிய விரைவில் அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகின்றது.

நடிகர் தனுஷும் மற்றும் இயக்குனர் ஐஸ்வர்யாவும் 2004ஆம் வருடம் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். திருமணமாகி 18 வருடங்களுக்கு பிறகு கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதி இருவரும் பிரிவதாக அறிவித்தனர். இச்செய்தி பலரையும் அதிர்ச்சி அடைய செய்தது. ரஜினியின் கோபப்பாத்தால் ஐஸ்வர்யா தனுஷுடன் சேர்ந்து எண்ணினார். ஆனால் தனுஷ் ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் ஐஸ்வர்யாவின் அம்மாவான லதா ரஜினிகாந்த் தனுஷ் மீது கோபம் அடைந்தார். அவருக்குத் தெரிந்த தயாரிப்பாளர்கள் இயக்குனர்களிடம் போன் செய்து தனுஷுக்கு படவாய்ப்புகள் தர வேண்டாம் என்று கூறிவிட்டாராம்.

இந்நிலையில் தனுஷ் தற்போது கைவசம் உள்ள திரைப்படங்களில் நடித்து வருகின்றார். தனுஷுக்கு கடந்த இரண்டு மாதங்களாகியும் இன்னும் எந்த பட வாய்ப்புகளும் வரவில்லை என்ற பதற்றம் ஏற்பட்டு இருக்கிறதாம். இதனால் தனுஷ் வெற்றிமாறனுக்கு அவரே கால் செய்து இருவரும் இணைந்து படம் பண்ணலாமா? என்று கேட்டுள்ளார். அதற்கு வெற்றிமாறனும் தனுஷின் மனநிலையை புரிந்துகொண்டு கண்டிப்பாக பண்ணலாம் என்று கூறியுள்ளாராம். இவர்கள் கூட்டணியில் வெளியான பொல்லாதவன், ஆடுகளம், வடச்சென்னை, அசுரன் உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால்  இப்படம் குறித்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கூடிய விரைவில் தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கூட்டணி குறித்த தகவல் வெளியாகாலாம் என கூறப்படுகின்றது.

 

Categories

Tech |