Categories
மாவட்ட செய்திகள்

“கண் அழுத்த நோய் விழிப்புணர்வு” பார்வை பறிபோகும் அபாயம்…. மருத்துவர்கள் எச்சரிக்கை….!!

 மதுரை அரசு மருத்துவமனையில் கண் அழுத்த நோய்க்கான விழிப்புணர்வு முகாம் காணொலி காட்சி மூலம் நடைபெற்றுள்ளது.

மதுரை மாவட்டம் அரசு மருத்துவமனையில் கடந்த 7ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை உலக கண் அழுத்த நோய்க்கான பல்வேறு விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றது. மேலும் முதல் நாளில் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கண் அழுத்த நோய் குறித்து காணொலி காட்சி மற்றும் துண்டுபிரசுரங்கள் வழங்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து இரண்டாம் நாளில் கருங்காலக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 40 வயதுக்கு அதிகமான மக்களுக்கு கண் அழுத்த நோய்க்கான நவீன கருவிகள் கொண்டு கண் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து மூன்றாவது நாளில் மதுரை அரசு மருத்துவமனையில். பொது மக்களுக்கென கண் அழுத்த நோய்க்கான கண்காட்சி நடைபெற்றுள்ளது.

இந்த மருத்துவ முகாமை  மருத்துவமனையின் டீன் ரத்தினவேல் தலைமை தாங்கியுள்ளார் .அப்போது அவர்  பேசுகையில் கண் அழுத்த நோயை  கண்டறிந்து சிகிச்சை அளிப்பது மிகவும் அவசியம். மேலும் காலம் தாமதிக்காமல் உடனடியாக சிகிச்சை அளிப்பதன் மூலம் கண் அழுத்த நோய் பாதிப்பு இல்லாமல் தடுக்க முடியும் என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து துறை தலைவர் விஜய் சண்முகம் பேசும்போது, கண் அழுத்த நோயானது பார்வை நரம்பு பாதிப்பதால், கண்ணில் உள்ள திரவ அழுத்தம் அதிகமாவதால் வருகிறது. மேலும் வயது முதிர்வு, ரத்த அழுத்தம் ஏற்கனவே குடும்பத்தில் உள்ள நபர்களுக்கு பாதிப்பு, அதிக தடுப்பூசிகள் போட்டுக்கொள்வது கொள்வது ஆகிய காரணங்களால் வருகின்றது.

இதனை மருந்துகள் கொண்டு உடனுக்குடன் சிகிச்சை அளிப்பதன் மூலம் தேவையற்ற பார்வை குறைபாட்டை தடுக்கலாம். மேலும் அந்த நரம்புகள் பாதிக்க விடாமல் கவனித்தால் பார்வை குறைபாட்டை தடுக்கலாம் என்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தால் மட்டுமே சரி செய்ய முடியும் என்று தெரிவித்துள்ளார்.மேலும்  40% கண் அழுத்த நோய் வந்த பின்னரே நோயாளிகளுக்கு அந்த நோய் வந்திருப்பது தெரிகிறது.

ஆகவே எந்த அறிகுறிகளும் இல்லாமல் இருந்தாலும் 40 வயதிற்கும் மேற்பட்டவர்கள் கண்ணிலுள்ள நரம்புகள் மற்றும் ரத்த அழுத்தம் போன்றவைகளை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்
அதேபோல் கண் அழுத்த நோய் முழுமையாக பாதிக்கப்பட்டால் கண் பார்வை முழுவதுமாக போய்விடும் என்றும் தெரிவித்துள்ளார் .

மேலும் கண்  மங்கலாக தெரிவது, கண்ணில் வலி, கண்ணில் உறுத்தல் போன்ற அறிகுறிகள் கண்    அழுத்த நோய்க்கு  இருக்கிறது என்று தெரிவித்துள்ளார் .

Categories

Tech |