தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்குவதற்கு பயோமெட்ரிக் முறை பயன்படுத்தப்படுகிறது. இதில் ஏராளமானோருக்கு கைரேகை பதிவாகாத காரணத்தினால் பொருட்கள் வழங்க முடியாது என ரேஷன் ஊழியர்கள் திருப்பி அனுப்பி வருகின்றனர். ஆதாரில் கைரேகை பதிவு செய்ய சேவை மையங்களுக்கு படையெடுக்கின்றன. சிலசமயங்களில் அங்கும் கைரேகை பதிவாகாத காரணத்தினால் உணவுப் பொருட்கள் வழங்கல் அலுவலரிடம் மனு செய்து பெற்று வருமாறு ரேஷன் கடை ஊழியர்கள் அறிவுறுத்துகின்றனர்.
இவ்வாறு அவர்கள் அலுவலகம் செல்லும் போதும் உடனடியாக வழங்காமல் அலைய விடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இதனால் ரேஷன் கடைகளில் உணவுப் பொருட்கள் வாங்க முடியாமல் பலரும் கஷ்டப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் கலெக்டர் வெளியிட்டுள்ள அறிக்கையில் விருதுநகர் மாவட்டத்தில் பொது வினியோக திட்டத்தின் கீழ் உள்ள நியாய விலை கடைகளில் மின்னணு விற்பனை எந்திரங்கள், கைரேகை பதிவு முறை மூலம் பொதுமக்களுக்கு அத்தியாவசியமான பொருட்கள் வினியோகிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் போது சில நேரங்களில் மின்னணு விற்பனை இயந்திரத்தில் கைரேகை பதிவு செய்தல், தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு வினியோகம் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் தொடர்ந்து புகார்கள் அளித்து வருகின்றனர். தொழில்நுட்ப கோளாறை சரிசெய்ய பின் மீண்டும் விரல் ரேகை சரிபார்ப்பு முறையில் அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் செய்யப்படலாம் என அனைத்து வட்ட வழங்கல் அலுவலர் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. எனவே இந்த வழிமுறைகளை பின்பற்றி இனிவரும் நாட்களில் நியாயவிலை கடைகளில் பொதுமக்கள் தங்கு தடையில்லாமல் அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் அறிவித்திருக்கிறார்.