லாரி மீது டிராக்டர் மோதிய விபத்தில் முதியவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள டீ புதூர் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் டிராக்டர் ஓட்டுனராக பணியாற்றி வந்துள்ளார். இவர் தனது டிராக்டரில் கரும்பு ஏற்றிக்கொண்டு அம்முண்டியில் இருக்கும் ஒரு சர்க்கரை ஆலைக்கு சென்றுள்ளார். இவருடன் அதே பகுதியில் வசிக்கும் ரகோத்தமன் மற்றும் சண்முகம் என்பவர்கள் உடன் சென்றுள்ளனர். இவர்கள் ஆலையில் கரும்பு இறக்கி விட்டு வேப்பூர் பைபாஸ் சாலையின் வழியே வந்து கொண்டிருக்கும் போது அவ்வழியே வேகமாக வந்த ஒரு லாரி டிராக்டரின் மீது பலமாக மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த 3 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ரகோத்தமன்(62) பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஆற்காடு டவுன் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.