தனது வளர்ச்சிக்கு காரணம் அண்ணன் மற்றும் தந்தைதான், ரஜினி இல்லை என்று கூறியுள்ளார் தனுஷ்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். இவர் நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் பாடகர், பாடலாசிரியர் என பல திறமைகளை தனக்குள் வைத்திருக்கின்றார். இவர் தற்போது வாத்தி, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இந்நிலையில் தனுஷ் தனது வெற்றிக்கு காரணம் தனது தந்தை கஸ்தூரி ராஜா மற்றும் அண்ணன் செல்வராகவன்தான் என கூறியுள்ளார்.
நடிப்பதில் விருப்பமில்லாமல் இருந்த தனுஷை தந்தை கஸ்தூரி ராஜா வற்புறுத்தலால் தான் துள்ளுவதோ இளமை படத்தில் நடித்ததார். தனுஷ் இத்திரைப்படத்தில் பல விமர்சனங்களை பெற்றிருந்தார். இருப்பினும் விடாமுயற்சியுடன் போராடியதால் அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான காதல் கொண்டேன் திரைப்படத்தில் மூலம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார். இதனால் தனது வளர்ச்சிக்கு தந்தை கஸ்தூரி ராஜா மற்றும் அண்ணன் செல்வராகவன்தான் காரணம் என்று கூறியுள்ளார். ரஜினியின் மருமகனாக இருந்ததால் நான் எந்த முன்னேற்றமும் பெறவில்லை. ரஜினியின் மருமகனாக இருக்கும் பெயர் மட்டுமே கிடைத்தது என்று கூறியுள்ளார் குறிப்பிடத்தக்கது.