Categories
அரசியல்

வாடிக்கையாளர்களே!!…. புதுசா ரூ.11.999 விலையில் இன்ஃபினிக்ஸ் டிவி…. இதோ முழு விபரம்….!!!!

இன்ஃபினிக்ஸ் நிறுவனம் புதிய இன்ஃபினிக்ஸ் எக்ஸ் 3 ஸ்மார்ட் டிவியை இந்தியாவில் அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த டிவி 32 இன்ச் மற்றும் 43 இன்ச் மாடல்களில் கிடைக்கும். இதையடுத்து இன்ஃபினிக்ஸ் எக்ஸ் 3, 32 இன்ச் மாடல் டிவியில் ஹெச்.டி ரெடி டிஸ்பிளே வழங்கப்பட்டு உள்ளது. 43 இன்ச் மாடல் டிவியில் ஃபுல் ஹெச்.டி டிஸ்பிளே 122% sRGB கலர் காமுட் கவரேஜ்ஜுடன் வழங்கப்பட்டு உள்ளது. இந்த டிவிகளில் ஆன்டி ஃப்ளூரே தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இது கடினமான நீல ஒளியை விலக்குகிறது. அதுமட்டுமல்லாமல் 400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வரை இந்த டிவி வழங்குகிறது. இந்த ஸ்மார்ட்டிவி ஹெச்.டி.ஆர் 10 சப்போர்ட்டுடன் வருகிறது.
இந்த டிவியில் 4 Cortex A55 cores கொண்ட quad core Realtek RTD2841 பிராசஸர் இடம் பெற்றுள்ளது. 1ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி ஸ்டோரேஜ் இதில் வழங்கப்பட்டுள்ளது. இந்த டிவியில் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் இடம் பெற்றுள்ளன. 32 இன்ச் மாடல் 20W அவுட்புட் தரும் 2 பாக்ஸ் ஸ்பீக்கர்களுடனும், 43 இன்ச் மாடல் மொத்தமாக 36W அவுட்புட் தரும் 2 பாக்ஸ் ஸ்பீக்கர்கள், 2 ட்வீட்டர்கள் வழங்கப்பட உள்ளது. இரண்டு  டிவிகளும் டால்பி ஆடியோவை சப்போர்ட் செய்யும்.
இந்த டிவியில் 3 ஹெச்.டி.எம்.ஐ போர்ட்டுகள், 2 யூ.எஸ்.பி போர்ட்டுகள், எதர்னட் போர்ட், மினி YPbPr வீடியோ அவுட்புட் போர்ட், 3.5 எம்.எம் ஹெட்போன்ஸ் ஜேக் இடம் பெற்றுள்ளன. மேலும் இந்த டி.வி ஆண்ட்ராய்டுடி.வி 11 ஓ எஸ்ஸில் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நெட்ஃபிலிக்ஸ், அமேசான் பிரைம், யூடியூப், கூகுள் அசிஸ்டெண்ட், க்ரோம்கேஸ்ட் போன்ற அம்சங்கள் கொண்ட இந்த ஸ்மார்ட் டிவியின் 32 இன்ச் மாடலின் விலை ரூபாய் 11,999-ஆகவும், 43 இன்ச் மாடலின் விலை ரூபாய் 19,999 எனவும் நிர்ணயம் செய்யப்ப்பட்டுள்ளது.

Categories

Tech |