Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு…. விரைவில் வெளியாகும் செம குட் நியூஸ்…!!!

கொரோனா ஊரடங்கு பிரச்சினைகளால் கடந்த 2020ஆம் ஆண்டில் அகவிலைப்படி உயர்வு நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. அதன்படி 7ஆவது ஊதியக் குழு பரிந்துரைப்படி மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி தற்போது 31 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், மேலும் மகிழ்ச்சி தரும் விதமாக இந்த மாதத்தில் இன்னொரு ஊதிய உயர்வு இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த முறை அகவிலைப்படி 2 சதவீதம் அல்லது 3 சதவீதம் உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்படி மார்ச் 16 அன்று நடக்க உள்ள மத்திய அமைச்சரவை கூட்டத்தில் 7ஆவது ஊதியக் குழு பரிந்துரைப்படி அகவிலைப்படி 3% உயர்த்தி, 34 சதவீதமாக உயர்த்தி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மத்திய அரசு ஊழியர்களின் ஊதியமானது ₹20,000  வரை உயரும். இதன் மூலம் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் 65 லட்சத்துக்கும் அதிகமான ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Categories

Tech |