Categories
உலக செய்திகள்

“தேவைப்பட்டால் எங்களிடம் உள்ள தளவாடங்களை அனுப்புவோம்”…. உக்ரனியர்களுக்காக பிரபல நாட்டின் அறிவிப்பு….!!!

உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்க தயாராக உள்ளதாக ஸ்பெயின்  அறிவித்துள்ளது.

உக்ரைன் ,ரஷ்யா   இடையேயான போர் தொடர்ந்து 15வது நாளாக நீடித்து வருகிறது. இதில் இரு நாடுகள் இடையே ஏராளமான பொதுமக்கள், வீரர்கள் என பல பேர் உயிரிழந்துள்ளனர். போர் காரணமாக உக்ரைனில் இருந்து லட்சக்கணக்கான மக்கள்  பாதுகாப்பைத் தேடி வெளியேறி வருகின்றனர். அதே நேரத்தில் ரஷ்யாவிற்கு உக்ரைனும் ஈடு கொடுத்து வருகிறது.

மேலும் தொடர்ந்து சண்டையிட உக்ரைனுக்கு ஆயுதங்கள் தேவைப்படுகிறது. இந்நிலையில் தேவைப்பட்டால் மேலும் ஆயுதங்களை வழங்க தயாராக உள்ளதாக ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்பெயின் கூறியுள்ளது.   இது பற்றி ஸ்பெயின்  ராணுவ மந்திரி மார்கரிட்டா ரோபிள்ஸ் மேட்ரிட் நகரில்நேற்று நிருபர்களிடம் பேசும் போது, “கிடைக்கும் சாத்தியக்கூறுகளின் எல்லைக்குள் உக்ரைனுக்குத் தேவைப்பட்டால் எங்களிடம் உள்ள தளவாடங்களை நாங்கள் அனுப்புவோம்.  இது உக்ரைனியர்கள் காட்டும் வீரத்திற்கான பாதுகாப்புக்கு உதவும் என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |