2022- 2023 ஆம் ஆண்டு ஆந்திரப்பிரதேச பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (மார்ச் 11) தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த பட்ஜெட்டை ஆந்திர நிதித்துறை அமைச்சர் புக்கனா ராஜேந்திரநாத் தாக்கல் செய்கிறார். இவ்வாறு பட்ஜெட் தாக்கலுக்கு முன்னதாக தன்னுடைய உரையில் திருக்குறளுக்கான தெலுங்கு பொருளை அவர் மேற்கோள் காட்டினார்.
அதாவது “தெய்வத்தால் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்” என்ற திருக்குறளுக்கான தெலுங்கு பொருளை அமைச்சர் புக்கனா ராஜேந்திரநாத் மேற்கோள் காட்டினார். இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மக்கள் எதிர்பார்ப்புடன் இருந்து வருகின்றனர்.