Categories
சினிமா

“இந்த ஜென்மத்தில் இத மட்டும் செய்யவே மாட்டேன்…!!” நடிகை யாஷிகா முடிவு…!!

கவலை வேண்டாம் என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகியவர் யாஷிகா ஆனந்த். தொடர்ந்து இவர் நடித்த இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படம் இவரை பிரபலமாக்கியது. தற்போது யாஷிகா எஸ்.ஜே சூர்யாவுடன் கடமையை செய் மற்றும் பாம்பாட்டம் போன்ற திரைப்படங்களில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு யாஷிகாவிற்கு மிகப்பெரிய விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த யாஷிகா ஆனந்த் தீவிர சிகிச்சைக்குப் பின்னர் தற்போது உடல்நலம் தேறி உள்ளார். ஆனால் இந்த சிகிச்சையில் இவருடைய உற்ற தோழி மரணமடைந்துவிட்டார். இந்த மரணம் யாஷிகாவை மிகவும் மனஅழுத்தத்திற்கு உள்ளாக்கியது.

இதனை தொடர்ந்து தோழியின் மரணம் மற்றும் தனது உடல்நிலை போன்றவற்றை கருத்தில் கொண்டு யாஷிகா ஆனந்த் இனிமேல் கார் மற்றும் பைக் போன்றவற்றை தனது வாழ்க்கையில் எந்த சூழ்நிலையிலும் ஓட்ட மாட்டேன் என முடிவெடுத்துள்ளார். அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வாங்கிய விலை உயர்ந்த பைக் ஒன்றை தனது சகோதரருக்கு அளித்துவிட்டார். யாஷிகாவின் இந்த முடிவினை ரசிகர்கள் வரவேற்றுள்ளனர். விபத்து காரணமாக தனது உடலில் செய்து கொண்ட பல அறுவை சிகிச்சைகள் மற்றும் தோழியின் மரணம் போன்றவை இந்த முடிவு எடுக்க செய்துள்ளனர் என ரசிகர்கள் கமெண்ட் செய்துள்ளனர்.

Categories

Tech |