Categories
மாநில செய்திகள்

“மாதவிடாய் குறித்த கேள்வி”…. தமிழக ஆசிரியைகளை அதிர வைத்த கல்வித்துறை…!!!

பாலியல் பிரச்சினைகள் அதிகரித்துள்ள காலகட்டத்தில் பள்ளிக்கல்வித்துறையின் ஆரோக்கியமற்ற செயல்பாடுகள் அச்சத்தை ஏற்படுத்துகின்றது.  புதிதாக  ‘எமிஸ்’ என்ற கல்வி மேலாண்மை செயலி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த  செயல்பாட்டால் ஆசிரியர்களும், மாவட்ட அதிகாரிகளும் இன்னலுக்கு ஆளாகி இருக்கின்றனர். தினமும் பாடம் நடத்தும்  நேரத்தை விட எமிஸ் செயலி தளத்தை செயல்பட வைக்க  ஆசிரியர்கள் பல மணி நேரம் போராட வேண்டி  உள்ளது.  இதன் ஒரு கட்டமாக மாணவ மாணவியரிடம் வகைகளில் 64 கேள்விகளுக்கு தினமும் பதில் பெற்று பதிவு செய்யுமாறு ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த கேள்விகளில் சிலவற்றுக்கு மாதம் ஒரு முறையும் சிலவற்றுக்கு தினமும் பதில் பெற வேண்டும். கால்கள் அல்லது பாதம் வளைந்து இருக்கிறதா?  மிகவும் குள்ளமாகஇருக்கிறாரா,  எடை குறைவாக உள்ளாரா: காலையில் என்ன உணவு சாப்பிட்டார், இரவு என்ன உணவு, பள்ளிகளில்  தரும் கலவையை சாதத்தில் எது பிடிக்கும் என்கிற கேள்விகளும் பதில் பெற வேண்டும் என கூறப்பட்டிருக்கிறது.மாணவியரிடம் மாதவிடாய் ஒழுங்காக வருகிறதா? மாதவிடாய் போது  உதிரப்போக்கு அதிகமாக உள்ளதா என்ற கேள்விகளுக்கு பதில் பெறுமாறும் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. மாணவர்களிடம் ‘குட்கா’ பயன்படுத்தும் பழக்கம் உள்ளதா? அவர்களுக்கு  பல் சிதைவு நோய் போன்றவை உள்ளதா? என ஆராய்ந்து பதில் தரவேண்டும்.

மேலும் மாணவ மாணவியரிடம் சிறுநீர் கழிக்கும் போது வலி அல்லது எரிச்சல் உள்ளதா என கேட்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்த கேள்விகளால் மாணவ,  மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பெண்களைப் பொறுத்தவரை மாதவிடாய் பிரச்சனைகளை தாயிடமும், மருத்துவரிடம் மட்டுமே கூறுவர். இந்த விஷயத்தில் பொது இடங்களில் கேள்வி கேட்பது மாணவியரை பீதியடைய செய்துள்ளது.

மேலும் மாணவர்கள் இது போன்ற கேள்விகளுக்கு பதில் அளிப்பது பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆண் ஆசிரியர்கள் தங்கள் மாணவியரிடம் மாதவிடாய் மற்றும் சிறுநீர் கழித்தல் குறித்த கேள்விகள் கேட்க முடியுமா? அல்லது பெண்ணா செயல்களால் மாணவர்களைப் பார்த்து இது தொடர்பான கேள்விகளை கேட்க முடியுமா? பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளால் எடுக்கப்பட்ட தவறான முடிவுகளும், நடவடிக்கைகளும் தான் இதுபோன்ற சர்ச்சைகளை  ஏற்படுத்தியுள்ளதாக ஆசிரியர்கள்,மற்றும்  மாணவ மாணவிகளும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

Categories

Tech |