Asus Vivobook 13 ஸ்லேட் OLED யை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதில் 13.3 இன்ச் OLED டச் ஸ்க்ரீன் டிஸ்பிளே உள்ளது. விண்டோஸ் 11ல் இயங்கும் இதில் குவாட் கோர் இன்டெல் பென்டியம் சில்வர் என்6000 பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி வரை ஸ்டோரேஜ் உள்ளது. அதோடு இதில் 50Whr பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 9 மணிநேரம் வரை பேட்டரி ஆயுளைக் கொடுக்கலாம் என கூறப்படுகிறது.
இந்த லேப்டாப்பில் பென் 2.0 ஸ்டைலஸ் சப்போர்ட், 170-டிகிரி வரை கழட்டி மாட்டும் வகையிலான ஹிஞ்ச், டிடேச்சபிள் கீபோர்ட், இன்டல் பென்டியம் சில்வர் N6000 SoC புராசஸர் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல் இந்த லேப்டாப்பில் வெறும் 30 நிமிடத்தில் 100% சார்ஜ் செய்து விடலாம் எனவும் ஒருமுறை சார்ஜ் ஏற்றினால் 9 மணி நேரம் வரை பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் நிறுவனம் கூறியுள்ளது. இதன் ஆரம்ப விலை ரூ.49,990 முதல் உள்ளது.