பாமகவினர் திரையரங்கில் குவிந்ததால் படம் பார்க்க வந்த மக்கள் பயந்து ஓடிவிட்டனர்.
தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா. இவர் நடிப்பில் சென்ற வருடம் வெளியான திரைப்படம் ஜெய் பீம். இத்திரைப்படத்தில் வன்னியருக்கு எதிரான காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக பாமகவினர் திடீர் என குற்றம் சாட்டினர். இதன்பிறகு படத்தின் சில காட்சிகள் மாற்றி அமைக்கப்பட்டது. மேலும் சூர்யா எந்த குறிப்பிட்ட சமுதாயத்தையும் இழிவு படுத்தவில்லை என்று கூறினார். ஆனால் பாமகவினர் ஏற்காமல் சூர்யாவை மன்னிப்பு கேட்குமாறு கூறி வந்தனர்.
இந்நிலையில் தற்போது சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் ரிலீஸ் ஆகியுள்ளது. முன்னதாக பாமகவினர் கடலூரில் திரைப்படத்தை வெளியிடக்கூடாது என நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தனர். இவர்களின் இச்செயலால் திரைப்படம் வெளியாகும்போது சூர்யா வீட்டிற்கு போலீஸ்சார் பலத்த பாதுகாப்புக்கு செய்தனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திரையரங்கிற்கு சின்னத்தம்பி சார்பாக 30 பேர் சென்றனர். இதைப் பார்த்த மக்கள் ஏதோ பிரச்சினை நடக்கப்போகுது என அங்கிருந்து சென்று விட்டனர். இதனால் திரையரங்கிற்கு அசம்பாவிதம் எதுவும் நடைபெறாத வண்ணம் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.