Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மக்களே உஷார்…. வாடிக்கையாளர்களை ஏமாற்றும் கடைகள்…. அதிரடி ஆய்வு செய்த அதிகாரிகள்….!!

கடைகளில் உணவு துறை  அதிகாரிகள் அதிரடியாக  ஆய்வு செய்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி உத்தரவின்பேரில் மாவட்டத்தில் அமைந்துள்ள அனைத்து கடைகளிலும்  உணவு துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இந்நிலையில் திருப்பத்தூர் அண்ணாசிலை பகுதி, பேருந்து நிலையம் போன்ற பகுதிகளில் அமைந்துள்ள  கடைகளிலும்  ஆய்வு செய்தனர். அப்போது அங்கு அமைந்துள்ள சில மின் கடைகளில் வாடிக்கையாளர்களுக்கு கெட்டுப்போன மீன்களை விற்பனை செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து அதிகாரிகள் 10 கிலோ மதிப்பிலான கெட்டுப்போன மீன்களை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இது போன்ற கெட்டுப்போன மீன் மற்றும் தரமற்ற பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யும்  கடைகள் மீது கடுமையான  நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். அதன்பின்னர்  அதிகாரிகள் உணவு பாதுகாப்பு  குறித்து  வியாபாரிகளுக்கு  விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்.

Categories

Tech |