முன்னணி நடிகையான சமந்தா தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளார்.
தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் படத்தில் நடித்து வருகின்றார். அன்மையில் தனது கணவரை விவாகரத்து செய்தார் குறிப்பிடத்தக்கது. இவர் விவாகரத்திற்கு பிறகு கூடுதலாக கவனம் செலுத்தி திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இந்நிலையில் தனது சம்பளத்தை 3 கோடியாக உயர்த்தியுள்ளார்.
நடிகை நயன்தாரா 5 கோடி ஒரு படத்திற்கு சம்பளமாக பெற்று தென்னிந்தியாவில் அதிகம் சம்பளம் பெறும் நடிகைகளில் முதலாவதாக இருக்கின்றார். இந்நிலையில் தென்னிந்தியாவில் அதிகம் சம்பளம் பெறும் இரண்டாவது நடிகையாக சமந்தா உள்ளார். அண்மையில் இவர் புஷ்பா திரைப்படத்தில் நடனமாடியது அனைவரையும் ஈர்த்தது. தற்போது இவர் நடிப்பில் காத்துவாக்குல இரண்டு காதல் திரைப்படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.