ரெட்மி நிறுவனம் பல அம்சங்களுடன் கூடிய ஸ்மார்ட் டிவி X 43 கடந்த பிப்ரவரி மாதம் 16ம் தேதி அன்று அறிமுகமாகியிருக்கிறது.
இந்த ரெட்மி ஸ்மார்ட் டிவியை கோடாக் மகிந்திரா வங்கியினுடைய கிரெடிட் கார்டு, டெபிட் கார்டில் வாங்கினால் 1500 ரூபாய் தள்ளுபடி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ரெட்மி நிறுவனமானது, ஜியோமி நிறுவனத்தின் துணை நிறுவனம். ஸ்மார்ட் போன், டிவி, டிஜிட்டல் கருவிகள் போன்றவற்றை ரெட்மி நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில், ரெட்மி நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவி எக்ஸ் 43 கடந்த பிப்ரவரி மாதம் 16ம் தேதி முதல் விற்பனைக்கு வந்திருக்கிறது. இந்த டிவி, 43 இன்ச் உடையது. 3840 x 2160 பிக்ஸல்களுடன் 4கே டிஸ்ப்ளே, பேனல் ஹெச்.டி.ஆர், டோல்பி விஷன், விவிட் பிக்சர் இன்ஜின், ரியாலிட்டி ப்ளோ போன்றவற்றை கொண்டிருக்கிறது.
இதன் RAM 2 ஜிபியும் ஸ்டோரேஜ் 16 ஜிபியும் இருக்கிறது. இது மட்டுமல்லாமல் கூகுள் அசிஸ்டென்ஸ், குயிக் மியூட், க்ரோம்கேஸ்ட், ஸ்மார்ட் ரெக்கமண்டேஷன்ஸ், பல மொழிகள், யூசர் சென்டர், ஐ.எம்.டி.பி, குயிக் வேக், எம்.ஐ. ஹோம் செயலி, பேட்ச்வால் 4 ஒருங்கிணைப்பு, போன்றவை இருக்கிறது.
மேலும், பெற்றோர்களுக்கு உதவக்கூடிய வகையில் கிட்ஸ் மோட், ஆட்டோ லேடன்ஸி மோட், குயிக் செட்டிங்ஸ் போன்ற பல்வேறு அம்சங்கள் உள்ளன. இந்த ஆண்ட்ராய்டு டிவி Windows 10-ல் இயங்கும். 2 USB போர்ட்டுகள், 3 HTMI, 2.1 போர்ட்டுகள், eARC போர்ட், ஆப்டிக்கள் போர்ட், ஹெட்போன் ஜாக், எதெர்நெட் போர்ட் கணெக்டிவிட்டி, டூயல் பேண்ட் வைஃபை, ப்ளூடூத் 5.0, ஏ.வி இன்புட் போன்றவை இருக்கின்றன.
28,999- ரூபாய் விலையுடைய இந்த டிவி அமேசான் மற்றும் எம்ஐ.காம் போன்ற தளங்களில் கிடைக்கிறது.