வேலையில்லாத இளைஞர்களுக்கு இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் பத்து முப்பது மணி அளவில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் ஒன்று நடைபெற உள்ளது.
தமிழகத்தில் கொரோனா காரணமாக பல இளைஞர்கள் வேலை இல்லாமல் தவித்து வருகின்றனர். அரசு வேலை வாய்ப்பு மையங்களில் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பாக தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றது. இதில் வேலையற்ற இளைஞர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன் பெற்று வருகின்றனர். இந்த வேலைவாய்ப்பு முகாமை அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். குறிப்பாக கிராமத்து மாணவர்கள் பங்கேற்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்த தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் பத்து முப்பது மணி அளவில் கோரிப்பாளையத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த வேலைவாய்ப்பு முகாம்களில் பல்வேறு திறன் பயிற்சி வழங்கும் நிறுவனங்களும் பங்கேற்க உள்ளன. இதில் பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு என்ற தகுதியுடையவர்கள் யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம். தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் தங்களது பயோடேட்டா மற்றும் கல்வி சான்றிதழ்கள் அனைத்தையும் கொண்டுவர வேண்டும். மேலும் இந்த வேலைவாய்ப்பு முகாம் குறித்து ஏதேனும் தகவல் அறிய விரும்பினால் என்ற 0461- 2340159 எண்ணை தொடர்பு கொள்ளலாம்.