Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் விஷாலுக்கும் தயாரிப்பாளருக்கும் இடையே மோதல்…. கைவிடப்பட்ட புதிய படம்?…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

பிரபல நடிகரான விஷால் “வீரமே வாகை சூடும்” என்ற படத்திற்கு பிறகு இயக்குனர் வினோத் இயக்கத்தில் “லத்தி” என்ற படத்தில் மும்முரமாக நடித்து வருகிறார். ஆதிக் ரவிச்சந்திரன், நடிகர் விஷாலின் 33-வது படமாக உருவாக இருக்கும் புதிய படத்தை இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்தப் படத்தை மினி ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்க உள்ளது. மாநாடு படத்தில் கிடைத்த அமோக வரவேற்பை அடுத்து நடிகர் எஸ்ஜே சூர்யா இந்தப் படத்தில் வில்லனாக இணைந்துள்ளார். அதேபோல் இந்த படத்துக்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார்.

“மார்க் ஆண்டனி” என்று இந்த படத்திற்கு தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட 5 மொழிகளில் பான் இந்தியா படமாக இந்த திரைப்படம் வெளியாக உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தயாரிப்பாளர்களுக்கும், விஷாலுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இந்த படம் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையே இயக்குனர் ஆதிக் இந்த படத்திற்கான படப்பிடிப்பு அரங்கம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தெரிவித்திருந்தார்.

அதேபோல் இந்த படத்திற்கான படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் இறுதியில் தொடங்கும் என்று கூறியிருந்தார். ஆனால் மார்ச் மாதம் தொடங்கியும் இன்னும் படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கவில்லை. நடிகர் விஷால் லத்தி படத்தை அடுத்து “மார்க் ஆண்டனி” படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த உண்மை விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |