வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு அருகே உள்ள தென்கழனியில் விக்னேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் விக்னேஷ் பப்ஜி மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளை பணம் செலுத்தி விளையாடி வந்துள்ளார். இதனால் இவருக்கு பண இழப்பீடு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் விக்னேஷ் பலரிடம் கடன் வாங்கி ஆன்லைனில் விளையாடியுள்ளார். இதை அறிந்து கொண்ட விக்னேஷின் பெற்றோர் அவரை கண்டித்துள்ளனர்.
இதனால் மனமுடைந்த விக்னேஷ் வீட்டில் இருந்த ஒரு அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த விக்னேஷின் பெற்றோர் திமிரி காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் விக்னேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.