ஐஸ்வர்யாவின் ‘முசாபிர்’ பாடலின் டீசர் நேற்று வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமா திரை உலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இவருக்கு சமீபத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு குணமடைந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது மீண்டும் அவருக்கு காய்ச்சல் மற்றும் தலை சுற்று ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் சிகிச்சை பெற்றுக் கொண்டே மருத்துவமனையிலிருந்து தனது வேலையை தொடர்ந்து செய்து கொண்டு வருகிறார். அந்த புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களை அதிர்ச்சி அடைய செய்தது. இதனைத் தொடர்ந்து ஐஸ்வர்யா இயக்கியிருக்கும் ‘முசாபிர்’ வீடியோ நேற்று ரிலீஸ் செய்யப்படும் என்று தெரிவித்திருந்த நிலையில் ஐஸ்வரியா மருத்துவமனையில் இருப்பதால் டீசர் மற்றும் வெளியானது.
இந்த நிலையில் பிரபு தேவா ஐஸ்வர்யாவின் ‘முசாபிர்’ பாடலுக்கு வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் “ஹேய் பப்பு, நான் ஐஸ்வர்யாவை ‘பப்பு’ என்று தான் அழைப்பேன். ஐஸ்வர்யா ஒன்பது வருஷம் கழிச்சு ஒரு சிங்கிள் பண்ணிருக்காங்க. அவங்க அவ்ளோ சீக்கிரம் எதுக்கும் ஒத்துக்க மாட்டாங்க. ஆனா அவங்களே ஒத்துக் கொண்டு பண்ணி இருக்காங்கனா ‘முசாபிர்’ வீடியோ சூப்பரா தான் இருக்கும். இதற்கு என்னுடைய வாழ்த்துக்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோவை ஐஸ்வர்யா தனது இணைய தள பக்கங்களில் ஸ்டோரியாக பகிர்ந்துள்ளார்.