காவல்துறையினருக்கும்- பொதுமக்களுக்கும் நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் மாவட்டத்தில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றுள்ளது.
காவல்துறையினருக்கும்- பொதுமக்களுக்கும் நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் மாவட்டங்களில் விளையாட்டு போட்டிகள் நடத்தி காவல்துறையினர் பரிசுகள் வழங்கி வருகின்றனர். அதன் அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் காவல்துறையின் சார்பில் கைப்பந்து போட்டி நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இந்த போட்டியை மாவட்ட ஊராட்சி கவுன்சிலரும், மூத்த வழக்கறிஞருமான ரவிச்சந்திர ராமவன்னி தொடங்கி வைத்த நிலையில் மாவட்ட துணை கண்காணிப்பாளர் ராஜ முன்னிலை வகித்துள்ளார்.
இதனையடுத்து போட்டியில் பல்வேறு பகுதியை சேர்ந்த 24 அணிகள் கலந்து கொண்டுள்ளது. அதில் இருமேனி பகுதியை சேர்ந்த இஸ்லாமிய இளைஞர் பேரவை அணியினர் முதல் பரிசை பெற்றனர். மேலும் திருபாலைகுடியை சேர்ந்த அணியினர் 2ஆம் பரிசையும், செய்யது அம்மாள் அறிவியல் மற்றும் கலை கல்லூரி அணியினர் 3ஆம் பரிசையும் தட்டி சென்றனர். இதனைதொடர்ந்து வெற்றி பெற்ற அணிகளுக்கு காவல்துறையினர் பரிசுகள் வழங்கி பாராட்டுகளை தெரிவித்தனர்.