நடிகர் தனுஷின் ‘நானே வருவேன்’ திரைப்படத்தில் செல்வராகவன் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது
தமிழ் சினிமா உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ். இவர் நீண்ட நாட்களுக்கு பிறகு தற்போது அண்ணன் செல்வராகவனுடன் இணைந்து படத்தில் நடித்து வருகின்றார். நானே வருவேன் திரைப்படத்தில் செல்வராகவன் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இப்படத்தின் புகைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் தனுஷ் பற்றி செல்வராகவன் கூறியதாவது. ” அவன் சினிமாவிற்கு வந்த போது நான் தான் நடிப்பை கற்றுக் கொடுத்தேன். ஆனால் தனுஷ் தற்போது என்னை மிஞ்சும் அளவிற்கு நடிப்பை கற்றுக் கொண்டான். அவனின் நடிப்பை பார்த்து நானே வியந்து உள்ளேன். கடந்த பத்து வருடத்தில் தனுஷிடம் பல மாற்றங்கள். மேலும் அவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் கதைகளும் எனக்கு பிடித்துள்ளது. இதனைத் தொடர்ந்து தனுஷின் வளர்ச்சியை பார்த்து தான் பெருமை கொள்வதாகவும் செல்வராகவன் பெருமையாக கூறியுள்ளார்.