பல ஹீரோக்களுடன் எனக்கு கெமிஸ்ட்ரி செட் ஆகி உள்ளது சிம்புவுடன் மட்டும் செட் ஆக வில்லை என்று தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் தமன்னா. இவர் தமிழில் படிக்காதவன், அயன், தேவி போன்ற படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். இவர் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளிலும் தொடர்ந்து படங்கள் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தமிழில் விஜய், அஜீத், விக்ரம், சூர்யா, விஷால் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த தமன்னா சிம்புவுடனும் நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து கடந்த 2017 ஆம் ஆண்டு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’. இந்த திரைப்படத்தில் சிம்பு இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இதில் வயதான அவருக்கு ஜோடியாக தமன்னாவும் இளம் சிம்புவிற்கு ஜோடியாக ஐஸ்வர்யாவும் நடித்திருந்தார்கள்.
இந்த நிலையில் சிம்புவுக்கு வயதான ஜோடியாக நடித்திருந்த தமன்னா எனக்கும் அவருக்கும் கெமிஸ்ட்ரி இந்த திரைப்படத்தில் செட் ஆகவில்லை என்று கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து பல ஹீரோக்களுடன் எனக்கு கெமிஸ்ட்ரி செட் ஆகி உள்ளது. ஆனால் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தில் சிம்புவிற்கு கதாநாயகியாக நடித்து இருந்தாலும் அப்படத்தின் கதை காரணமாக எங்களுக்குள் கெமிஸ்ட்ரி செட் ஆகவில்லை. இதனால் நான் சிம்புவுடன் இணைந்து மீண்டும் ஒரு படம் நடிக்க ஆசைப்படுகிறேன் என்று கூறியுள்ளார்.