தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான தளபதி விஜய் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து முடித்து உள்ளார். இதையடுத்து விஜய் வம்சி இயக்கத்தில் தில் ராஜூ தயாரிக்கும் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தயாராகும் படத்தில் நடிக்க இருக்கிறார். இதுவரையிலும் பெயரிடப்படாத இப்படம் வருகிற ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளது. இதனிடையில் விஜய் மாஸ்டர் திரைப்படத்திற்கு பின் மறுபடியும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்கு முடிவெடுத்துள்ளார். இதில் தான் அவருக்கு தற்போது ஒரு குழப்பம் ஏற்பட்டு உள்ளது. அதாவது இப்படத்திற்கு யாரை தயாரிப்பாளராக முடிவு செய்யலாம் என்ற குழப்பத்தில் விஜய் தற்போது இருக்கிறார். அவரை வைத்து படத்தை தயாரிப்பதற்கு தயாரிப்பாளர்கள் பல பேரும் போட்டி போட்டுக் கொண்டு வருகின்றனர்.
ஆனால் விஜய் மனதில் 3 தயாரிப்பாளர்களை முடிவு செய்து வைத்துள்ளார். அதன்படி கலைப்புலி தாணு, ஏஜிஎஸ் நிறுவனம், லலித் ஜெகதீஷ் என்று ஒரு பட்டியலையே அவர் வைத்திருக்கிறார். இதில் ஒருவரைத் தான் தன்னுடைய அடுத்த படத்தில் தயாரிப்பாளராக அவர் முடிவு செய்திருக்கிறார். அந்த வகையில் பார்த்தால் கலைப்புலி தாணுவுக்கு அதிக வாய்ப்பு உள்ளது என்று தெரிகிறது. அதுமட்டுமல்லாமல் தயாரிப்பாளரான லலித்தும் விஜய்யை வைத்து படம் தயாரிக்க மிக ஆர்வத்துடன் காத்திருக்கிறார். இதுபோன்ற ஒரு குழப்பத்தில் தான் விஜய் தற்போது இருக்கிறார். ஆனால் கண்டிப்பாக இந்த 3 நிறுவனங்களில் ஒரு நிறுவனம் தான் அவரை வைத்து படத்தை தயாரிக்க போகிறது என்பது மட்டும் உறுதி.