கடந்த மாதம் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 11 தமிழக மீனவர்களையும் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த மாதம் 7 ஆம் தேதி 11 மீனவர்கள் 3 விசைப்படகுகளில் மீன் பிடிக்க சென்றனர். இந்நிலையில் அவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதனையடுத்து கடந்த 1 மாதமாக சிறையில் இருந்து அவதிப்பட்ட 11 மீனவர்களையும் அதிகாரிகள் ஊர்காவல்த்துரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியுள்ளார்.
அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி கைது செய்யப்பட்ட 11 மீனவர்களையும் விடுதலை செய்து உத்தரவிட்டார். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட 3 விசைப்படகுகளின் உரிமையாளர்களும் வருகின்றன 27ஆம் தேதி ஆர்.சி. புத்தகத்துடன் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.