Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

காதலி பேசாததால் நேர்ந்த விபரீதம்…. விரக்தியில் வாலிபர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மார்த்தாண்டம் அருகில் இருக்கும் குளக்கச்சி கிராமத்தில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இருக்கு 24 வயதுடைய அஜித் என்ற மகன் இருந்துள்ளான். இவர் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரியில் லேப் டெக்னீசியனாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அஜித் ஒரு பெண்ணை தீவிரமாக காதலித்து வந்துள்ளார். இந்தப் பெண் சில நாட்களாக அஜித்துடன் பேசாமல் இருந்துள்ளார். இதனால் மனவேதனையில் இருந்த அஜித் தனது வீட்டின் அருகே விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அஜித்தின் நண்பர்கள் அவரை குளித்துறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அஜித் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |