Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அப்பா…! அப்பா…! என கதறிய 3 வயது சிறுவன்…. ஆதார் கார்டு எடுக்க சென்ற இடத்தில் நடந்த பரபரப்பு சம்பவம்….!!

மகனுக்கு ஆதார் கார்டு எடுக்க சென்ற தொழிலாளி மாரடைப்பு ஏற்பட்டு திடீரென இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள எரியோடு பாண்டியன் நகரில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் மில்லில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு ஜெயராணி என்ற மனைவியும், 3 வயதில் மகனும் இருக்கிறான். இந்நிலையில் தனது மகனுக்கு ஆதார் கார்டு எடுப்பதற்காக கிருஷ்ணமூர்த்தி வேடச்சந்தூர் ஆத்துமேடு பகுதியில் இருக்கும் தனியார் வங்கிக்கு மகனை தூக்கியபடி நடந்து சென்றுள்ளார். ஆனால் கிருஷ்ணமூர்த்தியால் நடக்க முடியவில்லை. இதனால் தனது மகனை கீழே இறக்கிவிட்டு ஏ.டி.எம் மையம் முன்பு அமர்ந்து இருந்தார். சிறிது நேரத்தில் கிருஷ்ணமூர்த்தி மயங்கி விழுந்துவிட்டார்.

அப்போது தந்தை மயங்கியதால் செய்வதறியாது நின்ற சிறுவன் அப்பா அப்பா என கிருஷ்ணமூர்த்தியை தட்டி எழுப்பி கதறி அழுதான். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் கிருஷ்ணமூர்த்தியை மீட்டு வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் மாரடைப்பு ஏற்பட்டு ஏற்கனவே கிருஷ்ணமூர்த்தி இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |