சமூக தளங்களில் அரசு செய்திகள் பதிவேற்றம் செய்துகொள்ளலாம் என செய்தி மக்கள் தொடர்பு துறை அறிவித்துள்ளது.
அரசு செய்திகள் அனைத்தும் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் முதல்வரின் அறிவிப்புகள், அரசின் திட்டங்கள், சாதனைகள், அரசு சார்ந்த செய்திகள் ,புகைப்படங்கள், வீடியோ பதிவுகள், அரசு ஆணைகள் அனைத்தும் முகநூல், இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்றவற்றில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.
சட்டசபை நிகழ்ச்சிகள் மற்றும் முதல்வரின் பங்கேற்கும் முக்கிய நிகழ்ச்சிகள் சமூகவலைத்தளங்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. ஆகவே பொதுமக்கள் செய்தி மக்கள் தொடர்புத் துறையால் ‘tndipr’ என்ற பெயரில் துவங்கப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்களை பின்தொடர்ந்து அரசின் அன்றாட நிகழ்வுகளை தெரிந்து பயன் பெறலாம் என செய்தி மக்கள் தொடர்பு துறை அறிவித்துள்ளது.