ஸ்ரீவில்லிப்புத்தூர் நகராட்சியில் கூட்டு துப்புரவு பணி தொடக்க விழா நடைபெற்றுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிப்புத்தூர் நகராட்சியில் துப்புரவு பணியாளர்கள் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை இடைவிடாமல் துப்புறவு பணி செய்வதற்க்கான “கூட்டு ஒப்புரவு” தொடக்க விழா நடைபெற்றது. இதில் நகர்மன்ற தலைவர் தங்கம்ரவிகண்ணன், நகர்நல அலுவலர் கவிப்பிரியா, சுகாதார ஆய்வாளர் சுரேஷ், சந்திரா, ஜஹாங்கீர், சுகாதார உதவியாளர் மோசஸ், தூய்மை பணி மேற்பார்வையாளர் மாடசாமி, மாரியப்பன், ஜான், அய்யம்பட்டி சமுதாய நிர்வாகி கவிமோகன், பரமன், செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அதன்பின்னர் நகர்மன்றத் தலைவர் தங்கம்ரவிகண்ணன் விழாவைத் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றியுள்ளார். அதில் பொதுமக்களாகிய நீங்கள் நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு ஒத்துழைப்பு தரவேண்டும். அதேபோல் அவர்கள் சிறந்த முறையில் பணியாற்றுவார்கள் சுகாதாரம் நன்றாக இருந்தால் தான் நம் வாழ்வு சிறக்கும் இதை கருத்தில் கொண்டு நமது வீட்டு, தெரு மற்றும் சுற்றுப்புறத்தையும் சுகாதாரமாக வைத்துக் கொள்ள வேண்டுமென அவர் கூறியுள்ளார் .