சத்தீஸ்கர் சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை அன்று தொடங்கியது. இதையடுத்து சட்டசபையில் நேற்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் பூபேஷ்பாகல் நேற்று 2022-23 நிதி ஆண்டுக்கான மாநில பட்ஜெட் ஆவணங்கள் அனைத்தையும் மாட்டு சாணத்தை கொண்டு செய்யப்பட்ட பெட்டியில் வைத்து சட்டசபைக்கு எடுத்துச் சென்றார்.
இப்பெட்டி ராய்ப்பூரில் கால்நடை வளாகத்தில் 10 தினங்களுக்குள் செய்து முடிக்கப்பட்டுள்ளது. அதாவது சாணப் பொடி, பசை மற்றும் மாவு போன்றவற்றை பயன்படுத்தி இப்பெட்டி தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த பெட்டியில் சமஸ்கிருதத்தில் “கோமயே வஸதே லக்ஷ்மி” என்று பொறிக்கப்பட்டு, அதற்கு “செல்வத்தின் தெய்வம் லக்ஷ்மி பசுவின் சாணத்தில் வசிக்கிறாள்” என்பது அர்த்தம் ஆகும்.