மிதுனம் ராசி அன்பர்களே..!! இன்று பொது வாழ்வில் புகழ் கூடும் நாளாக இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். சுபகாரியப் பேச்சுக்கள் நல்ல முடிவை கொடுக்கும். ஆன்மீக பணியில் ஆர்வம் காட்டுவீர்கள். மாலை நேரம் மகிழ்ச்சிக்குரிய செய்தி ஒன்று வந்து சேரும். இன்று தொழில் வியாபாரத்திலிருந்த மந்த நிலை மாறி வேகம் பிடிக்கும். தேங்கிய சரக்குகள் விற்பனை ஆகும். லாபம் பன்மடங்கு உயரும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறப்பான பலன் கிடைக்கப் பெறுவார்கள். இன்று புதிய பொறுப்புகள் சேரும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். பெண்களுக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும். காரியத்தில் அனுகூலமும் ஏற்படும். கலைத்துறையினருக்கு எளிதில் முடிய வேண்டிய காரியம் கூட கொஞ்சம் தாமதப்பட்டு தான் முடியும்.
ஆனால் எந்தவித பிரச்சினையும் இல்லை. எல்லாமே இன்று சிறப்பாகத்தான் இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளுமபோது் சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து செல்லுங்கள். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடியஅளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள். அனைத்து காரியமுமே ரொம்ப சிறப்பாக நடக்கும்.
இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான திசை : வடக்கு
அதிஷ்ட எண் : 4 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்