திடீரென கூரை வீடு தீ பிடித்து எறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள நெய்விளக்கு கிராமத்தில் கந்தசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான கூரை வீட்டை அப்பகுதியிலுள்ள நடுநிலை பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்துவரும் கலைச்செல்வி என்பவருக்கு வாடகைக்கு விட்டுள்ளார். இந்நிலையில் கலைச்செல்வி பள்ளிக்கு சென்றிருந்தபோது திடீரென அவரது வீடு தீப்பிடித்து எரிந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த வேதாரண்யம் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் வீட்டிலிருந்த பல பொருட்கள் எரிந்து சேதமடைந்துள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.