புதிய மின்கம்பம் அமைக்க வேண்டுமென பொதுமக்கள் அதிகாரிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் கங்கணம்புத்தூர் கிராமத்தில் ஒரு மின்கம்பம் சேதமடைந்து ஆபத்தான நிலையிலுள்ளது. அதனை சரி செய்யுமாறு அந்த பகுதியில் வசித்து வரும் மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் மனு அளித்துள்ளனர். மேலும் பொதுமக்கள் மனு அளித்து 2 மாதத்திற்கு மேலாகியும் இதுவரை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே அசம்பாவிதங்கள் நடைபெறுவதற்கு முன்னர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி புதிய மின் கம்பம் அமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.