Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பரிதாபமாக உயிரிழந்த 17 வயது சிறுமி…. தாய்க்கு அரசு பணி…. மாவட்ட நிர்வாகம் ஆணை….!!!!

மதுரை மாவட்டம் மேலூர் அருகே தும்பை பட்டியை சேர்ந்த 17 வயது சிறுமியை கடந்த மாதம் வீட்டை விட்டு வெளியே சென்றார். அதன் பிறகு வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் சிறுமியை கண்டு பிடிக்க முடியவில்லை. இதையடுத்து சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். அந்த விசாரணையில் சிறுமியும் அதே பகுதியை சேர்ந்த நாகூர் ஹனிபாவும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சுமார் 20 நாட்களுக்கு பிறகு கடந்த மூன்றாம் தேதி நாகூரின் தாயார் மதினா பேகம் மயங்கிய நிலையில் இருந்த அந்த சிறுமியை அவரது தாயாரிடம் ஒப்படைத்தார். உடனே சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் சிறுமி கடந்த வாரம் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் சிறுமியின் தாய் சபரிக்கு அரசு வேலை வழங்க மாவட்ட நிர்வாகம் ஆணையிட்டுள்ளது. மேலவளவு அரசு துவக்கப்பள்ளியில் சமையலறை நியமிக்கப்பட்ட பணி ஆணையை நேரில் சென்று வட்டாட்சியர் இளமுருகன் வழங்கினார்.

Categories

Tech |