காவல் துறையினரால் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பெல்லாக்குப்பம் பகுதியில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் வந்தது. இந்த தகவலின்படி குடிமைபொருள் குற்றபுலனாய்வு காவல்துறையினர் பெல்லாக்குப்பம் பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அந்த சோதனையின் போது அங்கிருந்தருந்த ஒரு கொட்டகையில் 21 சாக்கு மூட்டைகள் இருந்தது.
இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அந்த மூட்டைகளை பிரித்து பார்த்துள்ளனர். அதில் ரேஷன் அரிசி இருந்துள்ளது. அதை பறிமுதல் செய்த காவல்துறையினர் இதன் மொத்த மதிப்பு 1,050 கிலோ இருக்கும் என தெரிவித்துள்ளனர். அதன்பிறகு காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சிவப்பிரகாசம் என்பவர் அதிக விலைக்கு வெளி மார்க்கெட்டில் விற்பதற்காக அரிசியை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் சிவப்பிரகாசத்தை வலைவீசி தேடி வருகின்றனர்.