Categories
Tech பல்சுவை

WhatsApp-ல் புதிய அப்டேட்…. இனி இதுவும் ரொம்ப ஈஸி…. வெளியான சூப்பர் அப்டேட்…..!!!!!!

வாட்ஸ்அப் புதிய அப்டேட் ஒன்றை வெளியிட தயாராகி வருகிறது. அந்த வகையில் வாட்ஸ்அப் புதிய போல் (POLL) அம்சத்தை கொண்டுவர உள்ளது. இந்த அம்சம் சோதனையில் உள்ளது. WABetaInfo தளத்தின் தகவலும் இதை உறுதிப்படுத்தி உள்ளது. மேலும் இந்த அம்சம் ஐஓஎஸ் பயனர்களுக்கு முதற்கட்டாக அறிமுகப்டுத்தப்பட உள்ளது. இந்த அம்சமானது v2.22.6.70 என்ற பீட்டா பதிப்பு எண்ணுடன் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறது.

வாட்ஸ்அப்பில் போல் (POLL) அம்சம்:

பேஸ்புக் தளத்தில் முன்பாக போல் (POLL) அம்சம் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு உள்ளது. இதையடுத்து வாட்ஸ்அப்பில் போல் (POLL) அம்சம் குழுக்கள் உருவாக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது. இந்த போல் (POLL) அம்சத்தை இயக்கியவுடன் குழு உறுப்பினர்கள் வாக்களிக்க முடியும் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த அம்சமானது பீட்டா சோதனையில் உள்ளது. சீக்கிரம் இந்த அம்சம் செயல்பாட்டுக்கு வரும் என்று கூறப்படுகிறது.

வாட்ஸ்அப்பில் வாய்ஸ் மெசேஜ் ரெக்கார்ட்:

வாட்ஸ்அப்பில் வாய்ஸ் மெசேஜ் ரெக்கார்ட் செய்யும்போது இனிமேல் இடைநிறுத்தம் செய்து மீண்டும் தொடங்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வாய்ஸ் நோட்களை பதிவு செய்யும்போது அந்த ஆடியோவை இடைநிறுத்தம் செய்து மறுபடியும் தொடங்குவதற்கான அம்சத்தை வாட்ஸ்அப் வெளியிடுகிறது. இந்த அம்சமானது குறிப்பிட்ட பீட்டா பயனர்களுக்கு மட்டுமே வெளியிடப்பட்டு இருக்கிறது. வாட்ஸ்அப் பயனாளர்கள் அனுபவத்தை மேம்படுத்தும் அடிப்படையில் பல்வேறு அம்சங்களை உருவாக்கி வருகிறது. மெசேஜ் ரெக்கார்டிங் செய்யும்போது பயனர்கள் ஆடியோவை இடைநிறுத்தி மீண்டும் தொடங்கும் வகையிலான அம்சத்தை வாட்ஸ்அப் அறிமுகம் செய்யவுள்ளது. வாட்ஸ்அப் பீட்டாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளர்களுக்கு மட்டுமே இந்த அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது.

மேம்படுத்தும் வகையில் பல்வேறு அம்சங்கள்:

வாட்ஸ்அப் பயனர் அனுபவத்தை மேம்படுத்தும் அடிப்படையில் பல்வேறு அம்சங்களை உருவாக்கி வருகிறது. அதேபோன்று வாய்ஸ் மெசேஜ்களை பதிவு செய்யும்போது ஆடியோவை இடைநிறுத்தி மீண்டும் தொடங்குவதற்கான அம்சத்தை வெளியிட உள்ளது. தற்போது குறிப்பிட்ட பீட்டா சோதனையாளர்களுக்கு மட்டுமே இந்த அம்சம் வெளியிடப்பட்டு இருக்கிறது. பயனர்கள் தங்களது குரல் குறிப்பை பதிவுசெய்யும் நேரத்தில் அதை இடைநிறுத்தம் செய்யலாம். அதேபோன்று அதனை மீண்டும் தொடங்கவும் செய்யலாம். வாட்ஸ்அப் வாய்ஸ் குறிப்புகளை கேட்கும்போது அதனை இடை நிறுத்தம் செய்து மறுபடியும் இயக்கம் செய்ய முடியும்.

புதிய இடைநிறுத்த பட்டன்:

வாட்ஸ்அப்  குறித்த அனைத்து அம்சங்களையும் கண்காணிக்கும் வலைதளமான Wabetainfo அறிக்கையின் படி, வாட்ஸ்அப் தற்போது புதிய இடை நிறுத்த பட்டனை அறிமுகப்படுத்தியுள்ளது. பயனர்கள் பதிவை நிறுத்தி பிறகு அதனை மீண்டும் தொடங்க அனுமதிக்கும். முன்பாக வாட்ஸ்அப் பயனாளர்கள் குரல் குறிப்புகளை கேட்கும்போது இடைநிறுத்தப்பட்டு அதை இயக்க மட்டுமே அனுமதிக்கும் விருப்பம் காட்டப்படும். வாட்ஸ்அப் மெசேஜ்க்கு வெளியில் குரல் நோட்டை இயக்கும் விருப்பத்தை அறிமுகப்படுத்தியது. இதற்கு முன்பாக பயனர்கள் சேட்டிங்குள் சென்று குரல் நோட்டை கேட்க வேண்டி இருந்தது. தற்போது புதிய அம்சம் பயனாளர்கள் குரல் நோட்களை கேட்கும் போது பிற அரட்டைகளுக்குச் செல்ல அனுமதிக்கிறது.

பீட்டா சோதனையாளர்களுக்கு அறிமுகம்:

இந்த அம்சம் முன்பே குறிப்பிட்ட பீட்டா சோதனையாளர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளதாக Wabetainfo அறிக்கை தெரிவித்துள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 2.22.6.7 புதுப்பிப்புக்கான புதிய WhatsApp Business பீட்டாவைநிறுவிய பீட்டா சோதனையாளர்களுக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. குரல் நோட்ஸ்களை பதிவு செய்யும்போது புதிய இடைநிறுத்தம் மற்றும் மறுதொடக்கம் அம்சத்தை நீங்கள் பார்க்கவில்லை என்றால், உங்கள் வாட்ஸ்அப் கணக்கு தயாராக இல்லை என்று அர்த்தம் ஆகும். அதனை தொடர்ந்து நீங்கள் புதுப்பிப்பு பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் மற்றும் டுவிட்டர்:

மெட்டாவுக்குச் சொந்தமான வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் மற்றும் டுவிட்டர் ஆகிய தளங்கள் மெசேஜ்களுக்கு பதில் அளிக்கும் வகையிலான மெசேஜ் ரியாக்ஷன் அம்சத்தில் செயல்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஒரு பயனர் பெறும் ஒரு மெசேஜ்-க்கு எழுத்து வாயிலாகவோ அல்லது இமோஜி மூலமாகவோ எதிர்வினையாற்ற முடியும். ஆனால் வர இருக்கும் அம்சத்தின் வாயிலாக பயனர்கள் அனிமேஷன் மூலமான ரியாக்ஷன் மூலம் பதிலளிக்கலாம்.

பொதுவாக ஒரு அம்சம் வெளியிடுவதற்கு முன்வகை அதை ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ், வாட்ஸ்அப் வெப், வாட்ஸ்அப் டெஸ்க்டாப்பின் பீட்டா பயனர்களுக்கு வெளியிட்டு சோதிக்கப்படும். அந்த வகையில் புதிய அனிமேஷன் ரியாக்ஷன் WABetaInfo அறிக்கையில் காணப்பட்ட நிலையில், அவற்றில் ஒரு மெசேஜ்-க்கு எதிர்வினையாற்றும்போது புதிய அனிமேஷன் முறையில் பதல் அளிக்கும் அடிப்படையில் காணப்பட்டது. இந்த அம்சமானது ஆண்ட்ராய்டுக்கான வாட்ஸ்அப் பயனாளர்களுக்கு உருவாக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

Categories

Tech |