சீனாவில் கடந்த ஒரே நாளில் மட்டும் 214 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சீனாவில் முதன்முதலாக தோன்றிய கொரோனா உலக நாடுகளுக்கு பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியுள்ளது. இந்நிலையில் தற்போது சீனாவில் கொரோனா மீண்டும் தலை தூக்க ஆரம்பித்துள்ளது. அதன்படி கடந்த ஒரே நாளில் மட்டும் 214 பேரை கொரோனா பாதித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து சீனாவில் கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குப் பிறகு அதிகபட்ச தொற்று எண்ணிக்கை இதுதான். இந்த நிலையில் ஜிலின், குவாங்டாங், சேண்டாங் போன்ற மாநிலங்களில் அதிக அளவில் தொற்றுப் பரவி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து சீன அரசு வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களில் கொரோனா வைரஸ் அறிகுறி இல்லாமல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக தெரிகிறது. இதற்கிடையில் பூஜ்ஜியம் கொரோனா என்ற கொள்கையை சீன அரசு பின்பற்றி வருகிறது. இந்த நிலையில் சீனாவில் ஒருவருக்கு வைரஸ் உறுதி செய்யப்பட்டால் கூட நகரம் முழுவதும் பொது ஊரடங்கு அமல் படுத்தப்பட்டு தனிமைப்படுத்துதல், பரிசோதிப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் என்று தகவல் வெளியாகி உள்ளது.