மதுரையில் பூட்டிய வீட்டில் நகை செல்போனை திருடி சென்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மதுரையில் உள்ள மகாத்மா காந்தி நகர் மகாநதி தெருவில் விஜயலட்சுமி(47) என்பவர் வசித்து வருகின்றார். இந்நிலையில் அவர் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றுள்ளார். அப்போது மர்ம நபர் வீட்டிற்குள் புகுந்து 6 கிராம், நகை, வெள்ளிப் பொருட்கள், செல்போன் கடிகாரம் போன்ற பல்வேறு பொருட்களை திருடி சென்றுள்ளார். இதையடுத்து வீ ட்டிற்கு வந்து பார்த்த போது நகை மற்றும் வீட்டு பொருள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்த விஜயலட்சுமி கூடல்புதூர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
இப்புகாரின்பேரில் கூடல்புதூர் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில் முடக்கத்தான் பகுதியை சேர்ந்த முத்து(44) என்பவர் திருடி சென்றது தெரியவந்தது. உடனே காவல்துறையினர் முத்துவை கைது செய்து அவரிடமிருந்து பொருட்களை கைப்பற்றி உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.