டென்னிஸ் வீரர் ஆண்டி முர்ரே இந்த வருடம் முழுக்க தான் கலந்துகொள்ளும் போட்டிகளில் கிடைக்கும் பரிசு தொகையை நன்கொடையாக அளிக்கப்போவதாக கூறியிருக்கிறார்.
ரஷ்யா போர் தொடுத்ததால் பாதிக்கப்பட்டிருக்கும் உக்ரைன் நாட்டவர்களுக்கு, உதவுவதற்கு ஐ.நா குழந்தைகள் நிறுவனத்துடன் சேர்ந்து செயல்படவிருப்பதாக ஆண்டி முர்ரே கூறியிருந்தார். இவர், உலகின் முன்னாள் நம்பர் ஒன் டென்னிஸ் வீரர் ஆவார். இந்நிலையில் இவர் இந்த வருடம் முழுக்க தான் கலந்துகொள்ளும் போட்டிகளில் கிடைக்கும் பரிசு தொகையை நன்கொடையாக அளிக்கப்போவதாக கூறியிருக்கிறார்.
It’s vital education continues, so UNICEF is working to enable access to learning for displaced children, as well as supporting the rehabilitation of damaged schools, together with replacement equipment and furniture. 2/3
— Andy Murray (@andy_murray) March 8, 2022
இதுபற்றி அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, உக்ரைனில் தீவிரமடையும் தாக்குதலால் 7.5 மில்லியனுக்கும் மேற்பட்ட குழந்தைகள் அபாய கட்டத்தில் இருக்கிறார்கள். எனவே, அத்தியாவசிய பொருட்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சிக்கு தேவைப்படும் கருவிகளை அளிக்க, யுனிசெப் உடன் சேர்ந்து பணிபுரிகிறேன். எனவே இந்த வருடத்தில் என் வருமானத்தை முழுமையாக நன்கொடையாக அளிக்கவிருக்கிறேன் என்று குறிப்பிட்டிருக்கிறார்.