நீங்கள் கல்யாணத்துக்கு அல்லது பிற நிகழ்ச்சிகளுக்கும் செல்கிறீர்கள் என்றால் வரும்போது தாம்பூலப்பை கொடுப்பார்கள் இவ்வாறு தருவதற்கு மங்கலம் என்ற ஆன்மிக காரணம் உண்டு. ஆனால் அது மட்டுமல்ல அறிவியல் காரணமும் ஒளிந்துள்ளது.
தாம்பூலப் பையில் தேங்காய், பழம், வெற்றிலை மற்றும் பாக்கு வைப்பதுண்டு. இந்த பையில் எதை வைக்கிறோமோ இல்லையோ வெற்றிலை பாக்கு அவசியம் இருக்க வேண்டும்.
இது லட்சுமியின் அம்சம் அதனால் ஒருவர் வெற்றிலையை கொடுக்கும்போது மற்றவர் மறுக்காமல் வாங்கிக் கொள்ள வேண்டும். அறிவியல் ரீதியாக வெற்றிலை ஆரோக்கியத்திற்கும் துணைநிற்கிறது.
திருமணவீட்டில் விருந்து சாப்பாடு என்பதால் வயிறு உணவைச் செரிக்க சிரமப்படும் வெற்றிலைச்சாறு ஜீரண சக்தியை அதிகப்படுத்தி செரிக்க உதவுகிறது.
மேலும் நாக்கில் ஏற்படும் சுவையற்ற தன்மையைப் போக்கும் தன்மையும் இதற்கு உண்டு. வெற்றிலையை தனியாக சாப்பிட்டால் ரத்த ஓட்டம் பாதிக்கும், பாக்கு தனியாக சாப்பிட்டால் ரத்த சோகை உண்டாகும் அதனால் வெற்றிலை பாக்குடன் சேர்ந்து உண்பது முறையானது