Categories
மாநில செய்திகள்

மது பிரியர்களே உஷார்!…. வலுகட்டாயமாக குடும்பக்கட்டுப்பாடு?…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வேம்பார் சிந்தாமணி நகரில் முத்துச்சேர்மன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பஞ்சவர்ணம் என்ற மனைவியும், 2 பிள்ளைகளும் உள்ளனர். முத்துச்சேர்மன் விறகு வெட்டும் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனதால் வேலைக்கு செல்ல இயலாத நிலை உருவானது. இதையடுத்து கடந்த மாதம் 25ம் தேதி அன்று அதே பகுதியை சேர்ந்த சூறவாளி என்னும் நபரும், மேலும் சிலரும் விறகு வெட்டும் வேலைக்கு முத்துச்சேர்மனை அழைத்து சென்றுள்ளனர்.

பின்னர் மாலையில் வீட்டிற்கு வந்த முத்துச்சேர்மன் அழுது கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து மனைவி பஞ்சவர்ணம் என்ன நடந்தது ? எதற்காக அழுகிறீர்கள் ? என்று முத்துச்சேர்மனிடம் கேட்டுள்ளார். அதற்கு முத்துச்சேர்மன், சூறவாளி உட்பட சிலர் தன்னை ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சாயல்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்று வலுக்கட்டயமாக வாயில் பஞ்சினை அடைத்து தனக்கு குடும்பக்கட்டுபாடு செய்ததாக அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.

இதனால் தனக்கு அதிகமாக வலி உள்ளதாகவும் கூறியிருக்கிறார். மேலும் ரூ 1,100க்கு காசோலையும் மருத்துவமனையில் கொடுத்ததாக தெரிவித்துள்ளார். இது குறித்து சூறவாளியிடம் பஞ்சவர்ணம் குடும்பத்தினர் கேட்ட போது, அவர் அலட்சியமாக இதனால் யாரும் சாகபோவதில்லை, என்று கூறி அவர்களிடம் கூடுதலாக ரூ 3 ஆயிரத்தை கொடுத்து இதோடு இந்த பிரச்சினையை விட்டுவிடுங்கள் என்று கூறியுள்ளார்.

இதையடுத்து மருத்துவர்களிடம் இதுகுறித்து கேட்டபோது, குடும்பக்கட்டுப்பாடு முத்துசேர்மன் சம்மதத்துடன் தான் நடந்து. அவர் கைநாட்டு கூட வைத்துள்ளார் என்று பதிலளித்துள்ளனர். பின்னர் கடந்த 28ம் தேதி பஞ்சவர்ணம் குடும்பத்தினர் குடும்பக்கட்டுபாடு வலுக்கட்டயமாக செய்துள்ளதாக கூறி வேம்பாரை சேர்ந்த முனியசாமி, சூறாவளி, செல்வராஜ் கணேசன், கலசலிங்கம் ஆகிய 4 பேர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் ஒன்றை அளித்துள்ளனர்.

ஆனால் போலீசார் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றே கூறப்படுகிறது. டார்கெட் முடிக்க வேண்டும் என்பதற்காக மதுவிற்கு அடிமையானவர்களை அழைத்து சென்று ஓசியில் சாராயம் வாங்கி கொடுத்து வலுகட்டாயமாக குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்வதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது.

Categories

Tech |