வீட்டில் தனியாக இருந்த வாலிபர் திடீரென தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் கூலிப்பட்டியில் வசித்து வந்த ஸ்ரீதர்(21) சேலம் தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக ஸ்ரீதர் வீட்டில் இருந்தவாறு ஆன்லைனில் படித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து சம்பவத்தன்று ஸ்ரீதரின் சித்தப்பா சிவக்குமார் அவர் வீட்டிற்கு சென்றுள்ளார். மேலும் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்ததால் சந்தேகமடைந்த சிவக்குமார் ஜன்னல் வழியாக வீட்டில் யாரேனும் இருக்கிறார்களா என பார்த்துள்ளார்.
அப்போது ஸ்ரீதர் தூக்கில் தொங்கியபடி பிணமாக கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சிவக்குமார் உடனடியாக கதவை உடைத்து உள்ளே சென்று ஸ்ரீதரை மீட்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சென்ற நாமக்கல் போலீசார் ஸ்ரீதரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து ஸ்ரீதர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.