Categories
மாநில செய்திகள்

2022 ஆசிரியர் தகுதித்தேர்வு…. TN TRB வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…..!!!!!

தமிழகத்திலுள்ள இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்களின் காலிப் பணியிடங்களை நிரப்ப ஒவ்வொரு வருடமும் அரசு சார்பாக ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதில் பட்டப்படிப்புடன் பி.எட், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக பணியாற்ற தமிழக அரசு நடத்தும் ஆசிரியர் தகுதிக்கான TN TET-தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். அதேபோன்று இந்த ஆண்டும் ஆசிரியர் தேர்வு வாரியம் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தகுதி தேர்வினை நடத்த இருக்கிறது.

இந்த ஆண்டும் ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பான அறிவிப்பு கடந்த மார்ச் 7 ஆம் தேதி வெளியாகியது. அந்த வகையில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு மார்ச் 14 -ஏப்ரல் 13 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. TN TET- தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் trb.tn.nic.in என்ற இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்பித்துக் கொள்ளலாம். ஆனால் இதுவரையிலும் TN TET தேர்வு எந்த தேதியில் நடைபெறும் என்ற எவ்வித அதிகார பூர்வமான அறிவிப்பும் வெளியாகவில்லை.

TN TET தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் கட்டாயம் 18 வயது பூர்த்தியாகிருக்க வேண்டும். அதிகபட்சமாக வயது வரம்பு கிடையாது. அதுமட்டுமல்லாமல் TN TET தேர்வுக்கான தேர்வு முறையும் பின் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எழுத்து தேர்வு மொத்தம் 3 மணிநேரம் நடைபெறும் மற்றும் 150 MCQ-கள் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கான கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகள் அனைத்தும் விரைவில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

 

Categories

Tech |