நகை கடை உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் பகுதியில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் நகைகடை வைத்து நடத்தி வருகிறார். இவர் சுகுமார் என்பவரிடம் ரூபாய் 5 லட்சம் கடன் வாங்கியுள்ளார். இதில் 2 லட்சத்தை மட்டும் திரும்ப செலுத்தியுள்ளார். இந்நிலையில் சுகுமார் பாக்கி பணத்தை தருமாறு சதீஷ்குமாரிடம் கூறியுள்ளார். அதற்கு சதீஷ்குமார் பணம் வந்தவுடன் திருப்பி தருவதாக கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சுகுமார் நகைகடைக்குள் நுழைந்து சதீஷ்குமார் மற்றும் அவரது மகன் உள்பட 3 பேரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து சதீஷ்குமார் திண்டிவனம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சுகுமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.