கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு துறை சார்பில் தெங்கம்புதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், அருமநல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், முகிலன் விளை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், சரக்கல்விளை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் ஆகிய சங்கத்திற்குட்பட்டநகை கடன் தள்ளுபடி செய்யப்பட்ட பயனாளிகளுக்கு நகைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கியுள்ளார். மாநகராட்சி மேயர் மகேஷ் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்துகொண்டு பேசியபோது, கன்னியாகுமரியில் ஓகி புயல் பாதிப்புகளை பார்வையிட வந்த தலைவர்கள் எல்லாம் புகைப்பட கண்காட்சியை பார்த்து சென்றனர்.
ஆனால் தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின் வெள்ள சேதங்களை பார்வையிட்டுள்ளார். முதல்வர் மு.க ஸ்டாலின் சாதி மதம் பார்க்காமல் அரசின் பயன்கள் அனைத்தும் மக்களுக்கு கிடைக்கக் கூடிய வகையில் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார். கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று 127 கூட்டுறவு நிறுவனங்களின் மூலம் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட போது, கடன்களில் 34, 422 நபர்களுக்கு ரூபாய்139.63 கோடி மதிப்பில் நகை கடன் தள்ளுபடி செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது. நகை கடன் தள்ளுபடி எவ்வளவு ரூபாய்க்கு இருக்கிறது? என்பதை ஆய்வு செய்தபோது மொத்த நகைக்கடன்கள் 17, 500 கோடி தள்ளுபடி செய்ய வேண்டும் அந்த அளவிற்கு தொகை இருந்துள்ளது.
அப்போது இது நிச்சயமாக தவறான கணக்கு என்றும் இதில் ஏதேனும் குளறுபடிகள் இருக்கலாம் எனவும் சொல்லி தனது துறையின் மூலம் அதை சரி பாதியாக உத்தரவிடப்பட்டது. உடனே கணினி மூலமாக அதனை பரிசீலனை செய்து பார்த்த போது சேலம் மாவட்டத்தில் ஒருவர் மட்டுமே ஒரு கோடி ரூபாய் கடன் வைத்துள்ளார். அவரது மொத்த கடனில் வைத்து பார்த்தார் பத்தில் ஒரு பங்கு கடன் சேலம் மாவட்டத்தில் மட்டும் இருக்கிறது. இதனை முழுமையாக பரிசீலனை செய்ததில் 500க்கு மேல் உள்ள நகைகளை காட்டிலும் ஐந்து சவரன் நகைகள் எண்ணிக்கை 31 ஆக குறைந்துள்ளது. இதனையடுத்து அறிவித்தபடி 5 சவரன் நகை கடன் அல்லது ஐந்து சவரனுக்கு கீழ் வைக்கப்பட்ட வகை கடன்கள் கண்டிப்பாக தள்ளுபடி செய்யப்படும். அதை மீறி வைத்துள்ள நகைகள் குறித்து பேச முடியாது எனவும் அமைச்சர் மனோ தங்கராஜ் குறிப்பிட்டுள்ளார்.