Categories
உலக செய்திகள்

தலீபான்கள் ஆட்சியில் நடந்த தாக்குதல்கள்…. ஆப்கானிஸ்தானில் 400 மக்கள் உயிரிழப்பு…!!!

ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான்கள் கைப்பற்றிய பிறகு மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் மொத்தமாக 400 பொதுமக்கள் பலியாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஆப்கானிஸ்தான் நாட்டை கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி அன்று தலிபான்கள் கைப்பற்றினார்கள். இதற்கு ஆப்கானிஸ்தானை சேர்ந்த பெண்கள் உட்பட பல தரப்பினர்  எதிர்ப்பு தெரிவித்தனர். பெண்களுக்கு தலிபான்கள் கடும் கட்டுப்பாடுகளை விதித்ததால் அதற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களும் நடந்தது.

எனினும், தலிபான்கள் தொடர்ந்து பெண்களுக்கு பல கட்டுப்பாடுகளை அறிவித்து வந்தனர். இந்நிலையில், அந்நாட்டில் நிதி நெருக்கடி அதிகரித்தது. மேலும், தலிபான்கள் பொறுப்பேற்ற பின்பு பல தாக்குதல்கள் நடந்திருக்கின்றன. ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் தலீபான்களை குறிவைத்து பல தாக்குதல்களை நடத்தி வருகிறார்கள்.

இதில், அதிகப்படியாக பொதுமக்கள் பலியாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதிலிருந்து அங்கு மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் மொத்தமாக 400 பொதுமக்கள் பலியாகியிருப்பதாக ஐநா அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதில் அதிகப்படியாக ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதாக கூறப்பட்டிருக்கிறது.

Categories

Tech |