Categories
கல்வி மாநில செய்திகள்

10 ஆம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு..!!!

மார்ச் 9ம் தேதி முதல் 10 ஆம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான பொதுத் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தேர்வுத்துறை இயக்கம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா  மூன்றாம் அலைக்கு  பின்னர் கடந்த மாதம் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டு  நேரடி வகுப்புகள்  நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடப்பு கல்வியாண்டில் கட்டாயம் பொது தேர்வு நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து பள்ளிகளில் 100 சதவீத மாணவர்கள் வருகையுடன் விரைந்து பொதுத் தேர்வுக்கான பாடத் திட்டங்களை நடத்த ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக கடந்த வாரம் பொதுத் தேர்வுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டது. 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5-ஆம் தேதி முதல் பொதுத் தேர்வு தொடங்க உள்ளது. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு 10 ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுத உள்ள தனித் தேர்வர்கள் அறிவியல்  செய்முறை தேர்வு எழுதுவதற்கு சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்களை அணுகி பதிவு கட்டணமாக ரூபாய் 125 செலுத்தி தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

மேலும் கல்வி அலுவலர்களால் ஒதுக்கீடு செய்யப்படும் பள்ளிகளுக்கு சென்று அறிவியல் பாடப் பயிற்சி செய்முறை பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்ள வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்பில் சேர்வதற்கான  விண்ணப்பத்தை ஆன்-லைன் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு  மார்ச் 9ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதில் பயிற்சி வகுப்புகள் நடைபெறும் நாள்,மையம்  போன்ற விவரங்களை அறிய அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்களை அணுகி தெரிந்து கொள்ளலாம்.

Categories

Tech |