தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்களில் இருந்து மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் கடந்த 4ஆம் தேதி நடைபெற்றது. அதில் கீரமங்கலம் பேரூராட்சியில்துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் முத்தமிழ் செல்வியை எதிர்த்து போட்டியிட்டு 8வது வார்டில் திமுக உறுப்பினர் தமிழ்ச்செல்வன் வெற்றி பெற்றார்.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் பேரூராட்சி துணை தலைவர் தமிழ்ச்செல்வன் தனது பதவியை ராஜினாமா செய்வதாக சற்றுமுன் அறிவித்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை பேரூராட்சி செயல் அலுவலரிடம் அளித்தார்.