தமிழகத்தில் பிப்ரவரி 19-ஆம் தேதி நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சி பகுதிகளில் கள்ள ஓட்டுப்போட முயன்றதாக குற்றம் சாட்டி திமுகவை சேர்ந்த நரேஷ் குமார் என்பவரை கடுமையாக தாக்கி அரை நிர்வாணமாக்கியதாக அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கில் பிப்ரவரி 20ஆம் தேதி ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதில் அவரின் ஜாமின் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் கடந்த வாரம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில் உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இதையடுத்து ஜாமீன் மனு குறித்து காவல்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஜாமீன் மனு மீதான விசாரணை 11-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.